அன்னதானம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 300 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில். இதற்கான திட்டச்செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.38/- செலவிடப்பட்டன. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய் கூடுதலாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வடை மற்றும் பாயாசம் ஆகியவை வழங்கப்படுகிறது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு 2022-2023யில் செய்யப்பட்டபடி இந்தத் திட்டத்தை நாள் முழுவதும் பக்தர்களுக்கு உணவு வழங்க விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தினை 31.12.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இத்திருக்கோயிலில் அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80ஜி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.