உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அணியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம். இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை.நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள்.பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த...