Screen Reader Access     A-AA+
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Arunchalaeswarar Temple, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020343]
×
Temple History

தல வரலாறு

இத்திருத்தலத்தின் சிறப்புகள் காஞ்சிபுரம் சைவ சமய குரவர் எல்லப்பநாவலர் அவர்கள் இயற்றிய அருணாச்சல புராணம் என்ற நூலிலும் அருணைக் கலம்பகம், மற்றும் குமரகுருபரன் இயற்றிய சோண சைலமலை, அருணகிரியாரின் திருப்புகழ் நூலிலும், விரிவாக காணலாம். படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து...